Thursday, July 29, 2010

வயசை மிஞ்சிய எடையா?

உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள்!

மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மன இறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம்.

உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். குறிப்பாக சமையலறை பக்கம் போகாமல் ஏதாவது வேலைகளில் ஈடுபடலாம்!*

கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் முன் உங்கள் எடையையும் உடலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள்

இரண்டு தம்ளர் தண்ணீர் மற்றும் 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட்) சாப்பிடலாம். இருபது நிமிடங்களில் தீனி உண்ணும் உங்கள் எண்ணத்தை அழித்து உங்கள் உடல் ரசாயணத்தை மாற்றிவிடும்.(குறிப்பு: உவர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில்
நிரூபணமாகியுள்ளது.)

கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.

எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் - சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.

தீனி உண்ணும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனத்தை பாட்டு கேட்பதன்மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தியானிப்புகள் மூலமோ
திசை திருப்பலாம்.

பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சலாட் செய்து சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.


கல்யாண விருந்துகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு வேளை, மிக அவசியமான விருந்து நிகழ்ச்சி என்றால், காய்கறி, கீரை சூப் என பாதி வயிறு நிறைத்துக் கொண்டு செல்லுங்கள். இதனால் ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் என கண்டபடி சாப்பிடத் தோன்றாது.

Wednesday, July 28, 2010

நானும் என் நண்பனும்

இன்று (26.07.2010) மதியம் சுமார் 3.45 மணிக்கு என் கைபேசியில் அழைப்பு வந்தது நானோ கலுரியின் சிற்றுண்டியில் இருக்க கைபேசியை எடுப்பமா வேண்டாமா என்ற ஒரே குழப்பத்தில் இருக்கும்போது மனம் எடு எந்தன் நடக்கும் என்று பார்ப்போம். ஒருவழியாக கைபேசியை எடுத்து பேசிய போது மறுமுனையில் அறிமுகமான குரல் ஆனால் யார் என்று அறிய முடியவில்லை மெதுவாக யார் நீங்கள் என்று கேட்போது மாப்ளே நான் கதிர் பேசுறன் சொல்லுடா மாமா எப்படி இருக்க, எங்க இருக்க பத்து வருடம் கலித்து இப்பதான் என் ஞாபகம் வந்தத மாமா. இல்லடா மாப்ளே நான் வெளிநாடு போய் வந்த பின் எனக்கு எல்லாம் மாறிவிடாது. இப்பொழுதுதான் மேகவிடம் உன் கைபசி எண் வாங்கி உன்னிடம் பேசுறேன் மாப்ளே கோபம் வேண்டாம் நான் இப்பொது மதுரையில் தான் உள்ளேன். இரவு 10.30 தான் பஸ் அதனால் உன்னை பார்த்து தான் நான் கிளம்புவேன் நீ எப்போவர டா. மனதில் வேலை பட்றிய கவலை இருந்தாலும் நான் கண்டிப்பாக உன்னை பார்ப்பேன் என்று உறுதி கூறிவிட்டு என்னுடைய பணிக்கு சென்றேன். (நானும் அவனும் சென்னை க்கு அருகில் உள்ள திருபோரூர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் 1998 முதல் 2000 வரை அங்கு வேலை பார்த்தோம் அதன் பின் அவன் வெளிநாடு சென்றான் நான் மதுரை வந்துவிடேன் அதன் பின் இன்று தான் அன்வனின் குரல் கேடேன்) என் வேலை எல்லாம் ஒருவழியாக மணிக்கு முன் முடிந்ததால் நான் நிமதியோடு புறப்பட்டு அவனை பார்க்க சென்றேன் பத்துவருடம் கழித்து பர்கபோறோம் எப்படி இருக்க போறனோ நமால் கண்டுபிடிக்க முடியுமா என்ற பயத்துடன் சென்றேன் மீனாக்ஷிஅம்மன் கோயில் தெற்கு கோபுரம் அருகில் நான் பத்துவருடத்துக்கு முன் நான் பார்த்த அதே நடையுடன் அவன் பார்த்த உடன் மாப்ளே என்று என்னை கட்டிபிடித்தான். அதன் பின் இருவரும் மீனாக்ஷி அம்மன் கோவில் மற்றும் மகால் என் சுற்றிப் பார்த்தோம். பின்பு இரவு உணவு உண்ணவேண்டும் என்ற போது எங்கே போகலாம் என்ற போது எனக்கு கறிதோசை வேண்டும் என்றான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இதெலாம் நான் சாப்பிடாது கிடையாது அதன் பின் என் நண்பர் கர்திகைபண்டியனுக்கு பேசி எங்கு நல்லாருக்கும் என்று கேட்பின் சிம்மக்களில் உள்ள கோனார் கடைக்கு அவனை அழைத்து சென்று இருவரும் அங்கு சாப்பிடு வெகுநேரம் பேசிகொண்டிருந்தோம். 10.30 மணி சென்னை வான்கோ என்ற பின் தான் பஸ் வந்ததே தெரியும் அதன் பின் பிரிய மனம் இல்லாமல் தான் என் வண்டியில் வீடு சென்றேன் வீடு அடையும் வரை சென்னை நினைவுகள் என் முன் வந்து கொண்டே இருந்தது மீண்டும் என்று பார்ப்போம் ....

பின் குறிப்பு: என் மனைவிடம் நான் கறிதோசை சாபிட்டத்தை சென்னவுடன் சென்ன மறுவார்த்தை என்னைக்கு எனக்கு கரிதொசையோ அன்று தான் உன்னுடைய துணிமணியை நான் துவைத்து தருவேன் !!!!!

Thursday, July 22, 2010

படித்ததில் பிடித்தது

நான் வல்லமை வேண்டும் என்று கேட்டேன். அவர் கஷ்டங்களைத் தந்தார். என்னை வலிமையானவனாக ஆக்கிக்கொள்ள.

நான் நல்லறிவு வேண்டி நின்றேன். அவர் தீர்வு காண்பதற்காக பிரச்சினைகள் பலவற்றை என் முன்னே வைத்தார்.

நான் வளமை வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர் உழைத்து வேலை செய்ய திறமையும் அறிவும் தந்தார்.

நான் மனோபலம் வேண்டும் என்று கேட்டேன். அவர் சவால்களை என் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

நான் அன்பை கேட்டேன். அன்பு காட்டி உதவி செய்ய துன்பப்பட்டவர்கள் அருகில் என்னை அனுப்பி வைத்தார்.

நான் சில சவுபாக்கியங்களையும், வசதிகளையும் கேட்டேன். அவர், வாய்ப்புகளை உருவாக்கித் தன்ந்தார்.

நான் கேட்டது எதுவும் எனக்கு கிடைக்கவில்லை, ஆனால், எனக்கு தேவையானது எல்லாம் கிடைத்தது.

Wednesday, July 21, 2010

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதைநிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில
நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு
விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும்.
குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு
நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில்
வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும்
இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8. உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9. புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை
விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால்
குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர்
பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது
உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள்.
அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.

17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம்
தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை
போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க
பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய
நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி
கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.