Monday, August 30, 2010

இடர் களையும் பதிகம்

இடர் களையும் பதிகம்
திருச்சிற்றம்பலம்

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

கனைத்தெழுந்த வெண்திரை சூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத் தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும்
நினைத் தெழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடர் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூ வொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

மலைபுரிந்த மன்னவன்றன் மகளை போர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலை புரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கிழ்
நிலை புரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

பாங்கின் நல்லார் படிமஞ் செய்வார் பாரிடமும் பலிசேர்
தஊங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பிநோடுந் தலைவா நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேர் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியினையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்கலம் மேயவனே

கூறு கொண்டே மூன்று மொன்றாக் கூட்டியோர் வெங் கணையால்
மாறுகொண்டார் புரமொரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

வேழ வேன்கொம்பு ஒசித்த மாலும் விளங்கி நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சொதியுளாகி நின்றாய்
கேழல் இல்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக் கொண் நலத்தால்
நாடவல்ல பனுவன் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.

திருச்சிற்றம்பலம்

Sunday, August 29, 2010

பரிசு பெற்றார் நடிகர் விஜய் சிரிப்பதற்க்கு மட்டும்.

டாக்டர் விஜயின் அடுத்த படம்.

இதில் அவர் ஒரு பைக் ரேஸர்.

'குருவி'
படத்தில் கார் ரேஸில் எப்படி 'ஆக்சிலேட்டர் கட்' ஆனதும் அதன் வயரை பல்லால்
பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ, அதுமாதிரியான சாகச காட்சிகள்
நிறைந்த படம்.

ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக...

...
...
...
...
...
...
...
...

டாக்டர் விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்...
...
...
...
...
...
...
...
...
....
...

வில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது...
...
...
...
...
...
...
...
...
...
...

ஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்..
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

எப்படி?????
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

என்ன யூகிக்க முடியலயா? அப்ப இன்னும் கீழ போங்க.......
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...






சுட்டது நண்பர்களே!

Wednesday, August 25, 2010

வியர்வை சிந்தும் வேலவன்

பிற கோவில்களில் எழுந்தரிளியுள்ள முருகபெருமனைக் காட்டிலும், சிக்கல் சிங்கரவேலனுக்கு தனிச் சிறப்பு உண்டு.

ஐப்பசி மாதம் இங்கு நடை பெறும் கந்தசஷ்டி திருவிழாவின் 5- ம் நாள் பஞ்சமி திதி அன்று இரவு தாயார் வேல் நெடுங் கண்ணியிடம் இருந்து சூரபத்மனை அழிக்க சிங்காரவேலன் "சக்திவேல்" வாங்கும் வைபவம் நடைபெறும்.

அவ்வாறு வேல் வாங்கிய உடன் வேலவனின் திருமேனியில் இருந்து வியர்வை சிந்தும். இங்கு அற்புத காட்சி அங்கு வரும் பக்தர்களை பரவசம் அடையச் செய்கிறது.

நன்றி - தினத்தந்தி

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானை முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு வணங்கி 6666 பாடல்கள் பாடி, அதனை 6 மண்டலங்களாக வகுத்துள்ளார். மேலும் சிவஞான தேசிகம் என்னும் தலைப்பில் 32 வியாசங்கள் ஆக்கியுள்ளார்.

இவர் சண்முக கவசம், பஞ்சாமிர்த வண்ணம், குமாரஸ்தவம், ஞான வாக்கியம், பகை கடிதல் சஷ்டி வகுப்பு, அசோக சாலவாசம் முதலிய பல்வேறு பதிகங்கள் படைத்துள்ளார்.

குமாரவேல் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் பதிகம் ஸ்ரீமத் மனிவாசப் பெருமாள் அருளிய திருச்சதகம் போலவே படிக்கும் போது கண்ணில் நீர் ஊற்றெடுக்க வைக்கும் தன்மை வாய்ந்தது.

இவர் திருசெந்தூர் முருகன் மீது பாடிய பின்வரும் பாடல் மூலம் முருப்பெருமான் மீது இவர் வைத்திருன்த அசைக்க முடியாத பேரன்பினை உணர முடிகிறது.

"பெற்றவரும் மறப்பார் பிறந்தார் மகரும் மறப்பார்
உற்றவளும் மறப்பாள் ஒரு காலமும் நீ மறவாய்
அற்றம் அறுத்து அருள்வோர் உனை அன்றி எவர் உள்றே
தெற்றோன ஆட்படுவார்க்கு அருள் சிந்து புரத்தானே!"

இதன் பொருள்: "உன்னிடம் சரணடைபவர்களுக்கு விரைவாக அருளும் திருசெந்தூர் பெருமானே! தாய், தந்தை, உடன் பிறந்தோர், பெற்ற பிள்ளைகள், வாய்த்த மனைவி ஆகியோர் என்னை மறந்து விடுவார்கள். ஆனால், ஒருபோதும் நீ என்னை மறக்க மாட்டாய். என் துன்பத்தை நீக்கி அருள் செய்பவர் உனை அல்லால் வேறு யார் இருக்கின்றார்?

Sunday, August 22, 2010

'ஏசி' அறையில் இருப்பவர்கள் உஷார்!

ஏசி அறையில் இருப்பவர்கள் உஷார்!ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் உணவியல் துறைத் தலைவர் ஹேமமாலினி:

டிஹைட்ரேஷன் எனும் உடம்பில் நீர்ச்சத்து குறையும் தன்மை போதுமான அளவு நீர் குடிக்காத அனைவருக்கும் வரும். குறிப்பாக, 'ஏசி' அறையில் நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். 'ஏசி' குளிர்ச்சியாக இருப்பதால்
அந்தச் சூழலில் தண்ணீர் குடிக்கத் தோன்றாது. உடம்பின் நீர்த் தேவையும் நம்மால் உணர முடியாது.கோடையில் அடுத்த பிரச்னை நோய்த் தொற்று.

சத்தான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்த் தொற்றை விரட்டலாம். இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களான தர்ப்பூசணி, வெள்ளரி, கிர்னி போன்றவற்றை முடிந்த அளவு தினமும் சாப்பிட வேண்டும். உடம்பில் நீர்ச்சத்து குறைந்து விட்டால், எதிலும் கவனம் இருக்காது.சாதாரண
நாட்களிலேயே ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் நீர் ஒருவருக்கு தேவை. வெயில் காலத்தில் இதை விட கூடுதலாக ஒரு லிட்டர் குடிக்க வேண்டும். தண்ணீர் போன்று சிறந்த திரவ ஆகாரம் வேறு எதுவும் இல்லை.அதிகமாக வியர்வைவெளியேறும் போது, உடம்பில் சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட் ரோலைட்ஸ்அளவு கணிசமாகக் குறைந்து விடும். இதில் பொட் டாசியம் குறைந்தால் இதயத் துடிப்பில்
மாற்றம் ஏற்படும். வயதானவர்கள் கோடைக் காலத்தில் இறப்பதற்கு இதுவே காரணம். மோர், இளநீர் போன்றவற்றில் எலக்ரோலைட்ஸ் அதிகம். வெயில் காலத்தில் உப்பு சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. அது தவறு. மாங்காயைத் தவிர்த்து, மாம்பழங்களை அதிகமாகச் சாப்பிடலாம்.

நன்றி : தினமலர்

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

பசியின்மை,
வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+
சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல
வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சீரகத்தை
இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை,
தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக்
குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்
தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்
செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

"ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

தினமும்
தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக்
குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும்,
அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும்
நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

நன்றி
தமிழ் பெஸ்ட்

Wednesday, August 18, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக இடுகை



"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

Saturday, August 14, 2010

ரத்த அழுத்தமா... என்ன சாப்பிடலாம்?

இன்று மனிதர்களை பல வகையான நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் முதன்மை வகிக்கிறது. இவ்விரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்கள்.

நம் நாட்டில் 75 சதவிகிதம் பேர் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற பழமொழி போல் தினமும் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டும் நோய்தான் இந்த நீரிழிவு நோயும், இரத்த அழுத்த நோயும்.

ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருந்தால் இரத்த அழுத்த நோயும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த இரத்த அழுத்த நோயை மௌன கொலையாளி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மனித உடலின் இருதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. இந்த சுருங்கி விரியும் தன்மை 120/80 வரை சராசரி மனிதர்களுக்கு இருக்கும்.

இந்த சுருங்கி விரியும் தன்மை அதிகரித்தால் அதிக இரத்த அழுத்த நோயும் , குறைந்தால் குறைந்த இரத்த அழுத்த நோயும் ஏற்படுகிறது.

சில சமயங்களில் மனம் அதிக உணர்ச்சி வசப்படும்போது இரத்தம் வேகமாக உள்வாங்கி
வெளியேறுகிறது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை சித்தர்கள் பித்தவாத அழுத்தம் என்கின்றனர்.

மனித உடலில் அமைந்துள்ள பித்த நீர் அதிகம் சுரந்து வாத நீருடன் கலந்து பித்த வாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் அதிக ரத்த அழுத்தம் என்கிறோம். அதே நிலையில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வாத நீர் அதிகம் சுரந்து பித்த நீருடன் சேரும்போது வாத பித்த அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே குறைந்த இரத்த அழுத்தம் என்கிறோம்.

இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சத்துக்கள் இருந்தால் அவை இரத்தக் குழாய்களில் படிந்து
இரத்தத்தில் அழுத்தம் அதிகரித்து இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. பொதுவாக கோபம், கவலை, அச்சம் உள்ளவர்களை இரத்த அழுத்தம் அதிகம் தாக்குகிறது. உடல் வலியும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தூக்கமின்மையும் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.

பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் இருந்தால் அது குழந்தைகளுக்கும் வர 25 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

அதிக இரத்த அழுத்த நோயாளிகளின் உணவுக் கட்டுப்பாடு

1. இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்.

2. சர்க்கரை, இனிப்பு பண்டங்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

3. குளிரூட்டப்பட்ட பானங்கள், செயற்கை வர்ணம் அல்லது வாசனை கலந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

4. கேன்களில் அடைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது.

5. வெண்ணெய், நெய், கிரீம், மாமிசம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது.

6. மது, புகை, போதைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

7. உணவில் அதிகளவு கீரைகளும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் பிஞ்சு வகைகளையே அதிகம் சாப்பிடவேண்டும்.

8. தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

9. எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

10. வாயுவை அதிகரிக்கச்செய்யும் கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும்.

11. உணவில் அதிகளவு காரம், புளிப்பு சேர்க்கக் கூடாது.

12. எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

13. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக
உணவுக்குப்பின் சிறிது பழவகைகள் உண்பது நல்லது. அதில் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சை சாப்பிட்டு தூங்கச் சென்றால் நல்ல நித்திரை காணலாம். நல்ல நித்திரை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

14. மனதை அதிகம் பாதிக்கும் இடங்களுக்குச் செல்வதையோ, நிகழ்வுகளைப் பார்ப்பதையோ தவிர்ப்பது நல்லது.

15. இரவு படுக்கைக்குச் செல்லும் முன் சிறிது நேரம்அமர்ந்து தியானம் செய்து, பின் பால் அருந்திவிட்டு படுக்கச் செல்லவேண்டும்.

16. ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளுக்கு

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளை பெட்ரோல் இல்லா வாகனம் என்பார். அதாவது
வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் போகும்போது வாகனம் எங்கு வேண்டுமானாலும் நின்று போகலாம்.

அதுபோல்தான் குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளின் நிலையும். அவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும். சத்துக்கள் நிறைந்த உணவுகளையும், அதனை முறையாகவும் சாப்பிட்டு வரவேண்டும். சில நேரங்களில் இவர்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், தூக்கம் போன்றவை ஏற்படும். உடல் சோம்பலாகவே இருக்கும். உடலில் வலி ஏற்படும். அப்போது இவர்கள் சிறிது குளுக்கோஸ் கலந்த நீர் அருந்துவது நல்லது. அல்லது
சர்க்கரை கலக்காத எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். கேழ்வரகு கூழ், கம்பு கூழ் மிகவும் சிறந்தது. எலும்பு சூப் செய்து அடிக்கடி அருந்த வேண்டும்.

மதுபானத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும்.

பாதாம் பருப்பு - 2,

முந்திரி பருப்பு - 2,

பேரிச்சை - 2,

உலர்ந்த திராட்சை - 4,

இவற்றை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

குடலில் வாயுத்தன்மை அதிகரிக்காமல் பார்த்தக்கொள்ள வேண்டும். மேற்கண்ட வழிகளை
முறைப்படி கடைப்பிடித்து வந்தால் ரத்த அழுத்த நோய்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

Wednesday, August 11, 2010

கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.

1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம்.
குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே
இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை
கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.

2. ஹார்மோன்களின் சமநிலையில் பாதிப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப்பட்ட
பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோனின் அளவு குறைந்து விடுவது ஒரு காரணம்.
கருவானது கருப்பையினுள் ஊன்றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டிரான் சுரப்பு
அவசியமாகும். இதை கருப்பையின் உட்சுவரை திசுப்பரிசோதனை செய்வதன் மூலம்
அறிந்துக் கொள்ளலாம்.

3. சில பெண்களுக்கு கீழ் கண்ட நோயின் பாதிப்பினால் கருச்சிதைவு ஏற்படலாம். அவை

*- சாக்லேட் இரத்தக்கட்டிகள்

*-கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு குறைபாடு

*-கட்டுப்படுத்த முடியாத தைராய்டு சுரப்பி நோய்கள்

*-மோசமாக பாதிப்படைந்த இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகங்கள்

*-உடல் திசுக்களுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தி உருவாதல் -தொற்று நோய்கள்

4. சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவது ஒரு காரணமாகலாம். சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதால் எல் எச் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால்
கருமுட்டை யின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

5. நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற்படுவதால் கருச்சிதைவு உண்டாகலாம்.பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் உடலைத் தாக்கும்போது தாயின் நோய் எதிர்ப்புச் சக்தி
சரிவர வேலை செய்யாவிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம்,கருத்தரிக்கும் போது, கருவிலுள்ள தந்தையின் ஜீன்கள், தாயின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு மாறாக இருந்தாலும் கருச்சிதைவு ஏற்படலாம்.

6. தாயின் உடல் எதிர்மியங்கள் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். சில பெண்களுக்கு இரத்தம் உறைவதற்குக் காரணமாக இருக்கும் அணுக்களுக்கு எதிராக, உடல் எதிர்மியங்கள்
தோன்றக்கூடும், இதன் காரணமாக தாய்க்கும் கருவிலுள்ள சிசுவிற்கும் இடையே உள்ள இரத்த ஓட்டத்தில் இரத்த உறைவுக்கட்டிகள் உருவாகி, சிசுவிற்கு வேண்டிய இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இதை இரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

7. கருப்பையில் ஏற்படும் சில பிரச்சனைகள் காரணமாக கருச்சிதைவு ஏற்படும்.

* கருப்பையில் நார்த்திசுக் கட்டிகளின் காரணமாக கருச்சிதைவு ஏற்படும்.

* பிறவியிலேயே ஏற்படும் கருப்பை பிரச்சினைகள். கருப்பை பிறவியிலேயே இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கலாம்.

*கருப்பை உட்சுவர் சதைகள் மற்றும் கருப்பையின் உட்பாகத்தில் ஏதேனும் புண் ஏற்பட்டு
அதன் சதை கெட்டியாக வளர்ந்திருந்தால், கருப்பையில் கரு ஊன்றுவதில் சிக்கல்
ஏற்படலாம். இதை உள்நோக்கிக் கருவி மூலமோ அல்லது கதிர் வீச்சுப் படம் மூலமோ
கண்டுபிடுக்கலாம்.

* பலவீனமான கருப்பை வாய்; இப்பிரச்சினை உள்ள நோயாளர்களின் வாய் எப்போதும் தளர்ந்தே இருக்கும். கருப்பையில் சிசு வளர்ந்து கருப்பை வாயினை அழுத்தும் போது பலவீனமான கருப்பையின் வாய் திறந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. இதை உள் நோக்கிக் கருவி அல்லது கதிரவீச்சுப் படம் அல்லது கேளா ஒலி பரிசோதனை மூலமோ அறிந்துக் கொள்ளலாம்.

8. சுற்றுப் புற சூழலில் உள்ள நச்சுக்களின் தாக்கம் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து நச்சு வாய்ந்த இரசாயனங்கள் மற்றும் வாயுக்களுடன் வேலை செய்யும் பொழுது கருவுற்றால், இந்த நச்சுத் தாக்கம் சிசுவை பாதித்து கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆண்களும் இம் மாதிரி சூழலில் வேலை செய்யும் பொழுது, அவர்களுடைய விந்தணுக்கள் பாதிக்கப்படுகிறது.
புகைபிடித்தல், மது அருந்துதல், போதை மருந்துக்கு அடிமை போன்றவைகளும்
இதற்கு விதிவிலக்கல்ல.

9. உணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளின் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். தாயானவள் துக்கம், வேதனை, தனிமை, மனச்சோர்வு போன்ற பல்வேறு உணர்ச்சிகளால் பாதிக்கப்படும்போது பாதிப்பின் தன்மைக்கேற்ப கருச்சிதைவு ஏற்படுகிறது.

திருமணப் பொருத்தங்கள்

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல்
வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை
வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்
என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம்
ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ
கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:
பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10,
13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்: பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி: நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை
- எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி -
பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின்
விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6)
ராசி: பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு
பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி: பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

வசியம்: பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9)
ரஜ்ஜு (மாங்கல்யம்): நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல்
இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி: 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

|) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

||) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

|||) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே
மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம்
உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

1) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

2) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

3) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

4) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,
சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால்
10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்

A very good article which takes two minutes to read. I'm sending this to persons I care about.......I hope you do too!!!

Hai Friends,

A very good article which takes two minutes to read. I'm sending this to persons I care about.......I hope you do too!!!

Heart Attacks And Drinking Warm Water



This is a very good article. Not only about the warm water after your meal, but about Heart Attacks. The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt theirdrinking habitwhile eating.

For those who like to drink cold water, this article is applicable to you. It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead tocancer. It is best to drink hot soup or warm water after a meal.

Common Symptoms Of Heart Attack...
A serious note about heart attacks - You should know that not every heart attack symptom is going to be the left arm hurting . Be aware of intensepain in the jaw line.

You may never have the firstchest pain during the course of a heart attack. Nausea andintense sweating are also common symptoms. 60% of people who have a heart attack while they are asleep do not wake up. Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive.


A cardiologist says if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life. Read this & Send to a friend. It could save a life... So, please be a true friend and sendthis article to all your friends you care about.


I JUST DID

Lovingly,
N.Prabhu
Research Scholar,
Geomatics Engineering,
IIT Roorkee,
Roorkee - 247 667.