Monday, January 31, 2011

நான் பார்த்த முருகன் திருஉருவம்


இந்த முறை பழனி தை பூசத் திருவிழாவிற்கு சென்றிருந்த போது திருஆவினன்குடியில் உள்ள மண்டபத்தில் பார்த்த முருகனின் திருஉருவம் இது, மயிலில் இருந்து இறங்குவது போல் உள்ள இந்த முருகன் கையில் வில் இருப்பது போல் உள்ளது பார்க்கவே மிக அருமையாக இருந்தது.

Sunday, January 30, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 5

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3


மாலை மாற்றுதல்
மணமக்கள் தங்கள் கழுத்தில் உள்ள தனை மாலைகளைக் கழற்றி ஒருவர்க்கொருவர் மூன்றுமுறை மாற்றிக் கொள்ளுதல்.
தலையே நீவணங்காய்!- தலைமாலை தலைக்கணிந்து
தல்யாலே பலிதேரும் தலைவனைத், தலையே நீவணங்காய்!
(அப்பர் 4 : 9 : 1 )

உறவினர் வாழ்த்துதல்
இவ்வினாடி முதல், மணமகள், இல்லத்து அரசியாக வாழ்வுக்கு அரசியாக-இல்லத்தை ஆள்பவளாக விளங்குவதைக் குறிக்க, உறவினர் ஒருவர், மணமகளது நெற்றியில் பட்டம் கட்டி வாழ்த்துதல்.

பட்ட நெற்றியர் நட்டம் ஆடுவர்
பட்டினத் துறை பல்லவ னீச்சரத்
திட்டமா இருப்பார் இவர்
தன்மையரிவார் ஆர்
(சம்பந்தர் 3 : 112 : 2 )

விருந்தினர் வாழ்த்து
திருமணத்திற்கு வந்திருக்கும் பெருமக்கள் சார்பாக வாழ்த்துதல்
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து
(திருவாசகம்)

வாழ்கவே வாழ்க என் நந்திதிருவடி
வாழ்கவே வாழ்க மலம் அருத்தான்பதம்!
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள்!
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே!
(திருமூலர் திருமந்திரம்)

வையம் நீடுக மாமலை மன்னுக!
மெய்விரும்பிய அன்பர் விளங்குக!
சைவ நன்னெறி தாந்தழைத்து ஓங்குக!
தெய்வ வெந்திரு நீறு சிறக்கவே!
(பெரியபுராணம்)

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

வாழ்க மணமக்கள்!
வாழ்க வாழ்க வாழ்கவே!

(இதனை அனைவரும் ஒருசேர முழங்க வேண்டும்!)

************
முனைவர் ச.சாம்பசிவனார் தொகுத்த "திருமுறைத்தமிழ் திருமணம்" முற்றிற்று!

தமிழன் என்ற முறையில் இந்த திருமுறைத்தமிழ் திருமணத்தை நாமும் ஆதரிப்போம்
நன்றி.

Saturday, January 29, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 5

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3


திருவிளக்கு வழிபாடு
திருவிளக்கில் சுடர் ஒளியாய் திகழும் அருட்பெருஞ்ஜோதியை, மணமக்கள் வழிபட்டு அருள் வேண்டுதல்.

சோதியே! சுடரே! சூழ்ஒளி விளக்கே!
சுரிகுழல் பணைமுலை மடந்தை
பாதியே! பரனே! பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே! செல்வத் திருப்பெருன் துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே!
(திருவாசகம்)

திருமாங்கல்யத்தை வழிபடுதல்
ஒரு பெண் தாம்பாளத்தட்டில், குங்க்குமச் செப்பில் உள்ள திருநானை அப்படியே வைத்துக் கொடுக்கப் பொறுப்புள்ள ஒருவர் அதனை அவையில் உள்ள பெரியோர்களிடம் எடுத்துச் சென்று காட்ட, அவர்கள் தம் கையால் தொட்டு மனத்தால் வாழ்த்தல், பின்னர் அதனை மணமேடையில் கொண்டு வத்தல், அப்போது மணமக்கள் அதனை வழிபடல்.

அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும் அடிஇணை இவர்கள்
பணிதர அறநெறி மறையோடும் அருளிய பரண் உரை விடமொளி
மணிபொரு வரு மரகத நிலமலி புனல் அணைதரு
வயலணி
திணிபொழில் தருமணமது நுகர் அறுபதம் முரல் திருமிழலையே!
(சம்பந்தர் 1 : 20 : 5 )

ஓம்படை செய்தல்
மணமகளின் பெற்றோர்கள், தம் மகளின் வலதுகையை மணமகனின் வலதுகையிமேல் வைத்து ஒப்படைத்தல்.

உம்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப் பலம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம்! கேள்!
எம் கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க!
எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க!
கங்குல் பகல் எம் கண், மற்று ஒன்றும் காணற்க!
இங்கு இப் பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
(திருவாசகம்)

மணமக்கள் உறுதிமொழி எடுத்தல்

மணமக்கள் இருவரும் பின்வருமாறு உருதிபோலி எடுக்க வேண்டும்.

மணமகன்: _________________ ஊரில் உள்ள ___________________ (தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் மகனாகிய _______________ (மணமகன் பெயர்) நான், ____________________ (மணமகளின் தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் அருமைத் திருமகளாகிய _____________ (மணமகள் பெயர்) என்னும் பெயருடைய இவளை இறைவன் திருவருளால் என் பெற்றோரும் உற்றாருமாகிய உங்கள் நல்வழ்த்துக்களுடன், என் வாழ்க்கைத் துணை நலமாக மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்கின்றேன். நாங்கள் இருவரும் வள்ளுவர் வகுத்த வழியில் இல்லறம் ஏற்று இனிது நடத்துவோம் என உறுதியளிக்கின்றோம். அதற்கு இங்குள்ள சோதிச் சுடராம் திருவிளக்கே சாட்சியாகும்!
மணமகள்: _________________ ஊரில் உள்ள ___________________ (தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் மகளாகிய _______________ (மணமகள் பெயர்) நான், ____________________ (மணமகனின் தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் அருமைத் திருமகனாராகிய _____________ (மணமகன் பெயர்) என்னும் பெயருடைய இவரை இறைவன் திருவருளால் என் பெற்றோரும் உற்றாருமாகிய உங்கள் நல்வழ்த்துக்களுடன், என் கணவராக மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்கின்றேன். நாங்கள் இருவரும் வள்ளுவர் வகுத்த வழியில் இல்லறம் ஏற்று இனிது நடத்துவோம் என உறுதியளிக்கின்றோம். அதற்கு இங்குள்ள சோதிச் சுடராம் திருவிளக்கே சாட்சியாகும்!

அண்ணல் ஆலவாய் நண்ணினான்றனை
எண்ணியே தொழத் திண்ணம் இன்பமே!
(சம்பந்தர் 1 : 94 : 6 )

திருநாண் பூட்டுதல்

மங்கல இன்னிசை முழங்க, வந்திருந்தோர் மங்கல அரிசி அட்சதையை மணமக்கள்மீது போடத் திருமாங்கல்யத்தை மணமகளது கழுத்தில் மணமகன் அணிவித்தல் அப்போது மங்கலப்பெண்டிர் உடனிருந்து, திருநாண் கயிற்றில் மூன்று முடிச்சுப் போடுதல், பெண்டிர் குலவை இடுதல்; நாதசுரம் முழங்குதல்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைசலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலைக்
கண்ணின் நல் அஃது உறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பொருந்தகை இருந்ததே!
(சம்பந்தர் 3 : 24 : 1 )

நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.

Friday, January 28, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 4

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2


அரசாணிக்கால் நடுதல்

இக்குடும்பம் வாழையடி வாழையாக வளரவேண்டும் என்ற அடிப்படையில் அமைவது இது. மங்கலப் பெண்டிர் மூன்றுபேர் கூடிச் செய்யவேண்டு, மணமேடையின் இடப்புறம் (அதாவது பார்வையாளருக்கு நேரே வலதுபக்கம்) கட்ட வேண்டு, வாழை இலை பரப்பிப் பச்சரிசி இட்டு, "ஓம்" எனும் மந்திரம் எழுதி மணிவிழா நடத்திவைக்கும் பெரியவர் மலரிட்டு மணமகனைக்கொண்டு வலிபாடாற்றல்.

முன்னானை மூவர்க்கு முற்றுமாய் முறுக்கும்

பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்

மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்

தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை

என்னானை என்னப்பன் என்பார்கட்கு இன்னமுதை

அன்னானை அம்மானைப் பாடுதுங்க்காண் அம்மானாய்

(திருவாசகம்)

மணமகள் சடங்கு

மணமகளுக்கு திருநீறு குங்குமமும் கொடுத்தல்

முத்திந்தாழ் வடமும் சந்தனக் குழம்பும்

நீரும் தன மார்பினில் முயங்கப்

பத்தியார் கின்ற பாண்டிமா தேவி

பாங்கொடு பணிசெய நின்ற

சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே

சுடர் மரகத மடுத்தாற்போல்

அத்தனார் உமையோடு இன்புறுகின்ற

ஆலவா யாவதும் இதுவே!

(சம்பந்தர் 3 : 120 : 7 )

பெற்றோர் வழிபாடு

மணமகள் தன தாய் தந்தையரை வணங்கி அவர்தம் திருவடிகளில் சந்தானம் பூசி மலரிட்டு வழிபாடு செய்தல்

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ!

அன்புடைய மாமனும் மாமியும் நீ!

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ!

ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ!

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!

துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ!

இப்பொன் நீ, இம்மானிநீ இம் முத்து நீ!

இறைவன் நீ, இரு ஊருந்த செல்வன் நீயே!

(அப்பர் 6 : 95 : 1 )

பெற்றோர் வாழ்த்துதல்

மணமகளைப் பெற்றோர் வாழ்த்தித்திருநீறும் குங்குமமும் அணிவித்துத் திருமணப் புத்தாடைகள் வழங்குதல்

காணார் புலித்தோல் உடை தலை ஊண் காடுபதி

ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆறேடீ!

ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்

வானாடர் கோவும் வழியடியார் சாழலோ!

(திருவாசகம்)

திருஊஞ்சல்

மணமேடைக்கு முன்னாள் எதிரெதிரே இரு நாற்காலிகளில் மணமகனையும் மணமகளையும் அமரச செய்தல் திருஊஞ்சல் பாட்டை மங்கல மகளிர் சிலர் பாடப், பின்பு நாதசுரம் சாதனை இசைத்தல்.

சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாராயணன் அறியா நாள்மலர்த்தால் நாயடியேற்கு

ஊராகத் தந்தருளும் உத்தர கோச மங்கை

ஆரா அமுதின் அருள்தாள் இணை பாடிப்

போராற்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ!

(திருவாசகம்)


நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.

Thursday, January 27, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2


கோள் வழிபாடு (கும்ப வழிபாடு)

பச்சரிசியை வாழை இலைமேல் பரப்பிச் சிறிய செம்பு வைத்து அது நிறையத் தூய நீர் நிரப்பி, அதன் மேல் முழுத் தேங்காயும் உடன் மா இலைகளும் வைத்து, மலர் இட்டு, "நாளும் கோளும் (கிரகங்கள்) நல்லனவே செய்ய வேண்டும்". என்று இறைவனை நம் உள்ளத்தில் எண்ணி வேண்டுவோமாக!

வேயுறு தோழி பங்கன் விடம் உண்ட கண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு நிங்கள் கங்கை முடிமேல் அணிந்தது என்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி

சனி, பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே!

(சம்பந்தர் 2 : 85 : 1 )


மன்றில் திருவருள் பொலிதல்
இப்பொழுது இம் மன்றில் திருமண விழா இனிதே நடைபெற எம்பெருமானின் திருவருள் பொலிவதை உணர்ந்து மகிழ்வோமாக!

மாதிவர் பாகன், மறைபயின்ற வாசகன்,
மாமலர் மேய சோதி
நீதிகுண மாக நல்கும்
பொது அலர் சோலைப் பெருந்துறை எம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்பாடுத்த
அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே!
(மனிவாரசர் திருவாசகம்)

மணமகன் சடங்கு
மணமகனுக்குத் திருநீறு கொடுத்தல்

மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு,
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் இமை பங்கன், திருவாலவாயான் திருநீறே
(சம்பந்தர் 2 : 66 : 1 )

பெற்றோர் வழிபாடு
மணமகன், தன தாய் - தந்தையை வணங்கி, அவர்தம் திருவடிகளில் சந்தானம் பூசி மலரிட்டு வழிபாடு செய்தல்

தந்தையாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்தமாயின பெருமான் பரிசுடையவர் திருவடிகள்
அந்தண் பூம் புனலானைக் காவுடை யாதியை நாளும்
எந்தை என்று அடிசெர்வார் எம்மையும் ஆளுடையாரே!
(சுந்தரர் 7 )

பெற்றோர் வாழ்த்துதல்
மணமகனை பெற்றோர் வாழ்த்தித் திருநீறு அணிவித்த்டுத் திருமணப் புத்தாடைகளை வழங்குதல்

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புகவீர்காள்!
இம்மையே தரும் சோறும் கூறையும்
எத்த்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாது ஐயுறவு இல்லையே!
(சுந்தரர் 7 )
நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.

Tuesday, January 25, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்)
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1

1 பிள்ளையார் வழிபாடு

மஞ்சளில் பிள்ளையார் செய்து (அதாவது மஞ்சளை அம்மியில் அரைத்து ஒரு கைப்பிடி பிள்ளையார் போல் பிடித்து வைத்தல்) அறுகம்புல் இட்டு, அப்போதே மங்கள மடந்தையரை கொண்டு மிளக்கேர்ரிவைத்தல். தொடங்கும் வினைகள் இனிதே நிறைவேறப் பிள்ளையாரை முதலில் வணங்கித் தொடங்குதல் தமிழ் மரபு.


பிடியதன் உருஉமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்

கடி கணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே!

(சம்பந்தர் 1 : 123 : 5 )


2 முருகன் வழிபாடு


முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்

மருகனே! ஈசன் மகனே! - ஒருகைமுகன்

தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன்! நான்!

(11 ஆம் திருமுறை)

3 திருவிளக்கு வழிபாடு


திருவிளக்கிற்குப் பூ இட்டு வழிபாடு செய்தல்

இல்லாக விளக்கது இருள் கெடுப்பது!

சொல்லாக விளக்கது சோதி உள்ளது!

பல்லக விளக்கது பலரும் காண்பது!

நல்லக விளக்கது நமச்சி வாயவே!

(அப்பர் 4 : 11 : 8 )

4 நிறைநாழி வழிபாடு


நாழி நிறைய நெல் நிறைத்துப் பூ இட்டு வழிபடல்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும், இப் பூ மிசை

எண்ணன் பாலிக்கு மாறு, கண்டு இன்புற

இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே!

(அப்பர் 5 : 1 : 1 )

5 இறைவன்பால் நம் மனத்தைச் செலுத்துதல்


உயிருக்கு உயிராய் நிற்கும் இறைவனைச் சென்று அடையுமாறு நாம் அனைவரும் நம் மனத்தைச் செலுத்துவோமாக!


நீறு தாங்கிய திருநுத லானை

நெற்றிக் கண்ணனை நிறைவளை மடந்தை

கூறு தங்கிய கொள்கையி னானைக்

குற்றம் இல்லியைக், கற்றைஅம் சடைமேல்

ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு

அறிய சோதியை, வரிவரால் உகளும்

சேறு தாங்கிய திருத்தினை நகருள்

சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

(சுந்தரர் 7 )


நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.