Sunday, November 3, 2013

தண்ணிர்ப் பற்றாக்குறை நீங்கிப் பயன்தரும் 

கும்பமா முனியின் கரகநீர்க் கவிழ்த்துக் 
குளிர்மலர் நந்தனம் காத்துக் 
செம்பொன் நாட்டு இறைவற்கு அருளிய நினது 
திருவருட் பெருமையை மறவேன் 
நம்பனாக்கு இனிய அருள்மகப் பேறே 
நற்குணத்து ஓர்பெரு வாழ்வே 
வம்புஅறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல்
வல்லபைக் கணேசமா மணியே.       

Sunday, February 20, 2011

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

எனது தந்தை திரு இரா.பு. இரவிந்திரன் (கைபேசி எண்: 9842170429) அவர்கள் எழுதிய "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்ற புத்தகத்தை இந்த வலைப்பூக்கள் வாயிலாக உங்கள் முன் வழங்குவதன் மூலம் நான் பெருமைபடுகிறேன்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுரவாசல்
தள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே - திருமூலர்

1 - புறத்தோற்றம்

"ஐந்தெழுத்தில் பிறந்து ஐந்தெழுத்தில் வளர்ந்து
ஐந்தெழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
ஐந்தெழுத்தில் ஓர் எழுத்தை அறிந்து கூறவல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பத்தில் ஆடுமே" - சிவவாக்கிய சித்தர்

"நமசிவய" என்ற இந்த ஐந்தெழுத்து தத்துவத்தில்தான் நாம் பிறந்து வருகிறோம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் நாம் பிறந்து இவற்றிலிருந்து வெளிப்படுத்தப்படும் சக்தியால் நாம் வளர்கிறேம்.

"நமசிவய" "ய" என்ற எழுத்தில் உற்பத்தியான உயிர் (விந்து) காமம் ஏற்பட்ட "சி" என்ற எழுத்தில் உஷ்ண (நெருப்பு) தத்துவத்தால் ஆகாயத்திலிருந்து உடலுக்குள் வந்து "வ" என்ற காற்று தத்துவத்தில் நிறைந்திருந்து, இந்த "சிவய" (நெருப்பு, காற்று, ஆகாயம்) என்பதில் அருவாக இருந்த உயிர் "ம" என்ற நீர் தத்துவத்தால் உருவுக்கு வந்து "ந" என்ற மண் தத்துவமான தாயின் கருவறையில் பஞ்ச பூதங்களின் துணையிலேயே வளர்ந்து இந்த பிரபஞ்சத்தில் மனிதனாக பிறக்கிறான்.

பிறப்பு, இருப்பு, இறப்பு, தெய்வ செயல். பிறப்பது, இறப்பது விதிப்பயன். இருப்பு நம்கையில்
"வெற்றுடம்பாய் பிறந்த நாம்
வெள்ளைத்துணிபோர்த்தி போகும் காலம்"
வரை (இறப்பு) அதாவது நாம் மனிதனாக பிறந்து, இருந்து இந்த பொய் "மெய்" பஞ்சபூதங்களான ஆகாயத்தில் மீண்டும் கலந்து விடுகிறது.

நிலம் (ந) நீர் (ம) நெருப்பு (சி) காற்று (வ) ஆகாயம் (ய) இந்த ஐந்தெழுத்து தத்துவத்தில் தான் நம் பொய் "மெய்" (புறத்தோற்றம்) சுற்றம் சூழ மறைகிறது.
இதைத்தான் சிவவாக்கிய சித்தர் ஐந்தெழுத்தான "நமசிவய" என்பதில் பிறந்து ஐந்தெழுத்தான பஞ்சபூதங்களிலிருந்து வெளிப்படும் சக்தியால் வளர்ந்து, இந்த ஐந்தெழுத்தில் ஒரு எழுத்தை முழுமையாக, முறையாக நாம் அறிந்து ஓதினால் நம்மெய் (உடம்பில்) யினுள்ளே இருக்கும் நாதன் (ஆன்மா) நமக்கு துணைபுரியும் என்று கூறியுள்ளார்.

ஐந்தெழுத்தில் பிறந்து, ஐந்தெழுத்தில் வளர்ந்து, ஐந்தெழுத்தில் நமது புறத்தோற்றம் மறைந்து ஆன்மா ஐந்தெழுத்திலே கலந்து விடுகிறது. இதுவே பிறப்பு, இருப்பு, இறப்புத்தத்துவம்.

நாளைய பதிவில் பதினெட்டு நிலை பற்றிப் பார்ப்போம்.

Saturday, February 19, 2011

அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோயில் இராஜகோபுரம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக புகைப்படங்கள்

16 . 02 . 2011 அன்று கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த அன்னதானம் மாலை 4 மணிவரை நடைபெற்றது.

யாகசாலை நடைபெற்ற இடம்
ராஜகோபுரம் பின்புறம்

ராஜகோபுரத்திற்கு புனித நீர் கொண்டு வரும் காட்சி
ராஜகோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் காட்சி
முருகன் சந்நிதான கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் காட்சி
ராஜகோபுர இரவுநேர காட்சிஎங்கள் குழுவினர்

Tuesday, February 1, 2011

அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோயில் இராஜகோபுரம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதல்




பக்தகோடிகள் அனைவரும் வருக முருகன் அருள் பெருக

இவன்
பழனி பாதயாத்திரை சஷ்டி குழுவினர்
தல்லாகுளம், மதுரை - 625002

Monday, January 31, 2011

நான் பார்த்த முருகன் திருஉருவம்


இந்த முறை பழனி தை பூசத் திருவிழாவிற்கு சென்றிருந்த போது திருஆவினன்குடியில் உள்ள மண்டபத்தில் பார்த்த முருகனின் திருஉருவம் இது, மயிலில் இருந்து இறங்குவது போல் உள்ள இந்த முருகன் கையில் வில் இருப்பது போல் உள்ளது பார்க்கவே மிக அருமையாக இருந்தது.

Sunday, January 30, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 5

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3


மாலை மாற்றுதல்
மணமக்கள் தங்கள் கழுத்தில் உள்ள தனை மாலைகளைக் கழற்றி ஒருவர்க்கொருவர் மூன்றுமுறை மாற்றிக் கொள்ளுதல்.
தலையே நீவணங்காய்!- தலைமாலை தலைக்கணிந்து
தல்யாலே பலிதேரும் தலைவனைத், தலையே நீவணங்காய்!
(அப்பர் 4 : 9 : 1 )

உறவினர் வாழ்த்துதல்
இவ்வினாடி முதல், மணமகள், இல்லத்து அரசியாக வாழ்வுக்கு அரசியாக-இல்லத்தை ஆள்பவளாக விளங்குவதைக் குறிக்க, உறவினர் ஒருவர், மணமகளது நெற்றியில் பட்டம் கட்டி வாழ்த்துதல்.

பட்ட நெற்றியர் நட்டம் ஆடுவர்
பட்டினத் துறை பல்லவ னீச்சரத்
திட்டமா இருப்பார் இவர்
தன்மையரிவார் ஆர்
(சம்பந்தர் 3 : 112 : 2 )

விருந்தினர் வாழ்த்து
திருமணத்திற்கு வந்திருக்கும் பெருமக்கள் சார்பாக வாழ்த்துதல்
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து
(திருவாசகம்)

வாழ்கவே வாழ்க என் நந்திதிருவடி
வாழ்கவே வாழ்க மலம் அருத்தான்பதம்!
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள்!
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே!
(திருமூலர் திருமந்திரம்)

வையம் நீடுக மாமலை மன்னுக!
மெய்விரும்பிய அன்பர் விளங்குக!
சைவ நன்னெறி தாந்தழைத்து ஓங்குக!
தெய்வ வெந்திரு நீறு சிறக்கவே!
(பெரியபுராணம்)

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

வாழ்க மணமக்கள்!
வாழ்க வாழ்க வாழ்கவே!

(இதனை அனைவரும் ஒருசேர முழங்க வேண்டும்!)

************
முனைவர் ச.சாம்பசிவனார் தொகுத்த "திருமுறைத்தமிழ் திருமணம்" முற்றிற்று!

தமிழன் என்ற முறையில் இந்த திருமுறைத்தமிழ் திருமணத்தை நாமும் ஆதரிப்போம்
நன்றி.

Saturday, January 29, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 5

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3


திருவிளக்கு வழிபாடு
திருவிளக்கில் சுடர் ஒளியாய் திகழும் அருட்பெருஞ்ஜோதியை, மணமக்கள் வழிபட்டு அருள் வேண்டுதல்.

சோதியே! சுடரே! சூழ்ஒளி விளக்கே!
சுரிகுழல் பணைமுலை மடந்தை
பாதியே! பரனே! பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே! செல்வத் திருப்பெருன் துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே!
(திருவாசகம்)

திருமாங்கல்யத்தை வழிபடுதல்
ஒரு பெண் தாம்பாளத்தட்டில், குங்க்குமச் செப்பில் உள்ள திருநானை அப்படியே வைத்துக் கொடுக்கப் பொறுப்புள்ள ஒருவர் அதனை அவையில் உள்ள பெரியோர்களிடம் எடுத்துச் சென்று காட்ட, அவர்கள் தம் கையால் தொட்டு மனத்தால் வாழ்த்தல், பின்னர் அதனை மணமேடையில் கொண்டு வத்தல், அப்போது மணமக்கள் அதனை வழிபடல்.

அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும் அடிஇணை இவர்கள்
பணிதர அறநெறி மறையோடும் அருளிய பரண் உரை விடமொளி
மணிபொரு வரு மரகத நிலமலி புனல் அணைதரு
வயலணி
திணிபொழில் தருமணமது நுகர் அறுபதம் முரல் திருமிழலையே!
(சம்பந்தர் 1 : 20 : 5 )

ஓம்படை செய்தல்
மணமகளின் பெற்றோர்கள், தம் மகளின் வலதுகையை மணமகனின் வலதுகையிமேல் வைத்து ஒப்படைத்தல்.

உம்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப் பலம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம்! கேள்!
எம் கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க!
எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க!
கங்குல் பகல் எம் கண், மற்று ஒன்றும் காணற்க!
இங்கு இப் பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
(திருவாசகம்)

மணமக்கள் உறுதிமொழி எடுத்தல்

மணமக்கள் இருவரும் பின்வருமாறு உருதிபோலி எடுக்க வேண்டும்.

மணமகன்: _________________ ஊரில் உள்ள ___________________ (தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் மகனாகிய _______________ (மணமகன் பெயர்) நான், ____________________ (மணமகளின் தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் அருமைத் திருமகளாகிய _____________ (மணமகள் பெயர்) என்னும் பெயருடைய இவளை இறைவன் திருவருளால் என் பெற்றோரும் உற்றாருமாகிய உங்கள் நல்வழ்த்துக்களுடன், என் வாழ்க்கைத் துணை நலமாக மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்கின்றேன். நாங்கள் இருவரும் வள்ளுவர் வகுத்த வழியில் இல்லறம் ஏற்று இனிது நடத்துவோம் என உறுதியளிக்கின்றோம். அதற்கு இங்குள்ள சோதிச் சுடராம் திருவிளக்கே சாட்சியாகும்!
மணமகள்: _________________ ஊரில் உள்ள ___________________ (தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் மகளாகிய _______________ (மணமகள் பெயர்) நான், ____________________ (மணமகனின் தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் அருமைத் திருமகனாராகிய _____________ (மணமகன் பெயர்) என்னும் பெயருடைய இவரை இறைவன் திருவருளால் என் பெற்றோரும் உற்றாருமாகிய உங்கள் நல்வழ்த்துக்களுடன், என் கணவராக மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்கின்றேன். நாங்கள் இருவரும் வள்ளுவர் வகுத்த வழியில் இல்லறம் ஏற்று இனிது நடத்துவோம் என உறுதியளிக்கின்றோம். அதற்கு இங்குள்ள சோதிச் சுடராம் திருவிளக்கே சாட்சியாகும்!

அண்ணல் ஆலவாய் நண்ணினான்றனை
எண்ணியே தொழத் திண்ணம் இன்பமே!
(சம்பந்தர் 1 : 94 : 6 )

திருநாண் பூட்டுதல்

மங்கல இன்னிசை முழங்க, வந்திருந்தோர் மங்கல அரிசி அட்சதையை மணமக்கள்மீது போடத் திருமாங்கல்யத்தை மணமகளது கழுத்தில் மணமகன் அணிவித்தல் அப்போது மங்கலப்பெண்டிர் உடனிருந்து, திருநாண் கயிற்றில் மூன்று முடிச்சுப் போடுதல், பெண்டிர் குலவை இடுதல்; நாதசுரம் முழங்குதல்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைசலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலைக்
கண்ணின் நல் அஃது உறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பொருந்தகை இருந்ததே!
(சம்பந்தர் 3 : 24 : 1 )

நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.