Wednesday, October 27, 2010

வாழ்வை அறிந்து கொள்ள முற்பட்டால் உங்களுக்கு குழப்பம்தான் ஏற்படும்

"ஒரு மனிதன், தான் ஒரு பெண்ணைப் புரிந்து கொண்டேன் என்று சொன்னால் அவன் தற்பெருமை பேசுபவனாக இருப்பான். அவர்களைப் புரிந்து கொண்டேன் என்று சொல்லுபவன், ஒரு தந்திரசாலியாகவும், ஏமாற்றுக்காரனாகவும் இருப்பான். அப்படிப் புரிந்து கொண்டேன் என்று நடிப்பவன் ஒரு நிலையான கொள்கை இல்லாத பச்சோந்தி போல் இருப்பான். அவன் ஏதே ஒரு எதிர்ப்பார்ப்புடன் வாழ்பவன்.

அதற்கு மாறாக, ஒருவன், அவர்களைப் புரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லையானால், அவன் அவர்களைப் புரிந்து கொள்ள ஆசைப்படாதவனாகவே இருப்பான், அதனால் அவன் அவர்களைப் பிரிந்து கொண்டதுபோல் நடிக்கவும் தேவை இல்லை. ஏனெனில் அவர்களை அறிந்து கொள்ளவே அவன் விரும்பவில்லை. ஆகவே, அவன், அவர்களை அறிந்து கொண்டவனாகிறான்".

"இதைப் போலத்தான் வாழ்வும், வாழ்வு ஒரு பெண்ணைப் போலத்தான், அதை அறிந்து கொள்ள முற்பட்டால், உங்களுக்கு குழப்பம்தான் ஏற்படும். முதலில், அதைப் புரிந்த கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுங்கள். அதில் முழு ஈடுபாட்டோடு வாழ முற்படுங்கள். அப்பொழுது அறிந்து கொள்ளுவீர்கள்".

- ஓஷோவின் குட்டிக் கதைகள்

Sunday, October 24, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

2010 உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9
, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

Saturday, October 23, 2010

சாந்தா அபிஷேகம்

சாந்தா அபிஷேகம்

இன்று (22.10.2010) அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் சாந்தா அபிஷேகம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன், ஸ்ரீ ராக்காயி அம்மன், விநாயகர், சிவலிங்கம், குருநாதர், காத்தவராயன், மதுரைவீரன், சப்பாணி, பெரிய கருப்பு, இருளப்பர், கருப்பசாமி ஆகியோருக்கு 18 பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

எண்ணெய் காப்பு, மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, தயிர், பால், சந்தானம், சாத்துக்குடி சாறு, கரும்பு சாறு, திராட்சை சாறு, அன்னம், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், சொர்ணம் (காசு), அழகர்கோயில் தீர்த்தம், பன்னீர்.

அதன் பின்பு கோயில் முழுவதும் பூப்பந்தலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மனுக்கு வெள்ளி கவசமும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுயிருந்தது, ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு 8 . 30 மணிக்கு மேல் பூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது.


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

அதன்பின் உபயதாரர்கள் அனைவர்களுக்கும் மரியாதை நிமிர்த்தமாக துண்டு வழங்கப்பட்டது. அபிஷேகம் செய்த காசும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பிரசாதமாக சக்கரைப் பொங்கல், பருப்பு பாயாசம், கடலைப் பருப்பு சுண்டல், அபிஷேகம் செய்த அன்னம், பஞ்சாமிர்தம் மற்றும் வடை ஆகியவை வழங்கப்பட்டன.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002.

Friday, October 22, 2010

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்

பாண்டிய மன்னன் ஆணைப்படி சிதப்பரம் கோயிலை அமைத்த கருவூரார், திருமூலர் வழித் தோன்றலாகையால் மூல குருவின் பெருமை நிலைக்கும்படியாக சித்தர்கள் கூறும் உடல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே கோயிலை அமைத்துள்ளார்.


மனிதன் நாள் ஒன்றுக்கு 21600 மூச்சு விடுகிறான். கனக சபையின் மேல் 21000 தங்க ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மனித உடலில் 72000 நாடிகள் உள்ளன. தங்க ஓடுகளைப் பொறுத்த அடிக்கப்பட்டுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72000.

கனக சபையின் முன் உள்ள ஐந்து படிகள் பஞ்சபூதங்கள். தொண்ணுற்றாறு வெள்ளிப் பல கணிகள் தொண்ணுற்றாறு உடல் தத்துவங்கள்.

மனித உடலில் இருதயம் இடது பக்கம் சற்றுத் தள்ளி இருப்பதுபோல் நடராஜர் சன்னதி சற்று இடப்புறமாக ஒதுங்கியுள்ளது. இருதயம் தடித்துக் கொண்டே இருப்பது போல் நடராஜர் ஆடிக் கொண்டே இருக்கிறார்.


இருதயத்திற்குப் பக்கவாட்டில் கபாடங்கள் இருப்பதுபோல் சிதம்பதத்திலும் கருவறையில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களிலும் வழிகள் உள்ளன.

இக்கோயிலில் உள்ள ஐந்து சபைகளும் மனித உடலுடன் ஒப்பிடத் தக்க வகையில்

அன்னமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞான மய கோசம்
ஆனந்த மய கோசம்
பிராணமய கோசம்


என்று பஞ்ச கோசங்களாகவே வர்ணிக்கப்படுகின்றன.

சித்தான கருவூரார் என்ற சித்து
சின்மயத்தில் பேரின்பம் கொண்ட சித்து
முத்தான வயததுவும் முன்னுறாண்டு
மூதுலகில் பாண்டியனுக்கு உகந்த சித்து
பக்தியுடன் சிதம்பரமாம் தேவஸ்தானம்
பட்சமுடன் நிர்மித்த ஞானசித்து - போகர் 7000 / 5769

என்று போகர் கூறுவதால் கருவூராரே சிதம்பரம் கோயிலை அமைத்தவர் என்பது விளங்குகிறது.

சித்தர்கள் வரலாறு - எஸ்பி. பி. இராமச்சந்திரன்
தாமரை நூலகம், சென்னை - 26

Monday, October 18, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் பத்து

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் எட்டைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்பதைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 17.10.2010 அன்று பத்தாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பத்தாம் நாள் முறையாக திரு. நாகராஜ் குடும்பத்தார், திரு ராஜா குடும்பத்தார், திரு சண்முகம் குடும்பத்தார் மற்றும் திரு ராமஜெயம் (நாடார் கடை) பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி கலர் மற்றும் மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கு இன்று சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மிக அழகாக இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. ராமஜெயம் குடும்பத்தார் (2 பேர்), திரு ராஜா குடும்பத்தார் (2 பேர்), திரு சண்முகம் குடும்பத்தார் (3 பேர்), மற்றும் நாகராஜ் குடும்பத்தார்(2 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.




ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்



ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக கேசரியும் மற்றும் பாசிப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

நவராத்திரி விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002



Sunday, October 17, 2010

எங்க ஊர் பெருமாள் கருடவாகனத்தில் (திருப்பாலை)

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்பது

நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் எட்டைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 16.10.2010 அன்று ஒன்பதாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஒன்பதாம் நாள் முறையாக திரு. சுப்புராம் குடும்பத்தார், மற்றும் கடை ஊழியர்கள் பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் சரஸ்வதி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. சுப்புராம் குடும்பத்தார் (3 பேர்) அவர்களுக்கும் , கடை திரு. ஊழியர்கள் (48 பேர்களுக்கும்) மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்

ஜெகன் அவர்கள் வரைந்த சரஸ்வதி படம்

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக சக்கரைப் பொங்கல் மற்றும் கடலைப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

ஒன்பதாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002




Saturday, October 16, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் எட்டு

நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 15.10.2010 அன்று எட்டாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. எட்டாம் நாள் முறையாக திரு. மனோசிங் குடும்பத்தார், திரு ரத்தினக்குமார் அக்கா குடும்பத்தார், திருமதி சாந்தா குடும்பத்தார் மற்றும் திரு மோகன் குமார் குடும்பத்தார் பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் அன்ன லட்சமி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. மனோசிங் குடும்பத்தார் (2 பேர்) அவர்களுக்கும் , திரு. ரத்தினக்குமார் அக்கா குடும்பத்தார்களுக்கு (1 பேர்), திருமதி சாந்தா குடும்பத்தார் (1 நபர்), திரு மோகன் குமார் அவர்களின் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.


ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்


ஜெகன் அவர்கள் வரைந்த அன்ன லட்சமி படம்

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக புளியோதரையும் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.

எட்டாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002


Friday, October 15, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஏழு

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 14.10.2010 அன்று ஏழாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஏழாம் நாள் முறையாக திரு. கருப்பையா குடும்பத்தார், திரு காமராஜ் குடும்பத்தார் பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் லட்சமி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. கருப்பையா அவர்களின் தந்தை அவர்களுக்கும், திரு கருப்பையா குடும்பத்தார் (4 பேர்) அவர்களுக்கும் , திரு. காமராஜ் அவர்களின் தம்பி குடும்பத்தார் (2 பேர்), திரு காமராஜ் அவர்களின் தாயார் அவர்களுக்கும், திரு காமராஜ் குடும்பத்தார்களுக்கும் (௬ நபர்), திரு கருப்பையா அவர்களின் அக்கா குடும்பத்தார் (2 பேர்)களுக்கும், மற்றும் திரு கருப்பையா அவர்களின் நண்பர் அவர்களுக்கும் (1 நபர்) மரியாதை செய்யப்பட்டது

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்


ஜெகன் அவர்கள் வரைந்த லட்சமி படம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்

ஏழாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.


அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 00௨


Thursday, October 14, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 13.10.2010 அன்று ஆறாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஆறாம் நாள் முறையாக திரு. பாஸ்கரப் பண்ணையார் குடும்பத்தார், திரு உமாபதி குடும்பத்தார், மற்றும் போலீஸ் காலணியில் உள்ள திருமதி இலச்சுமி குடும்பத்தார், திரு கணேசன் குடும்பத்தார், திரு ஜெயராமன் குடும்பத்தார் பூஜையாகும்.

அவருடைய ஜெகன் அவர்களின் மனைவி கலர் மற்றும் மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. பாஸ்கரப் பண்ணையார் குடும்பத்தார் (3 பேர்), திரு. உமாபதி குடும்பத்தார் (3 பேர்), மற்றும் திரு உமாபதி அவர்களின் அக்கா (1 நபர்) அவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. மற்றும் திருமதி இலச்சுமி குடும்பத்தா(4 பேர்)ருக்கும், திரு கணேசன் குடும்பத்தார் (3 பேர்), திரு ஜெயராமன் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்


ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த கலர் கோலம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக தேங்காய் சாதம் மற்றும் பாசிப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

ஆறாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002

Wednesday, October 13, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்து

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 12.10.2010 அன்று ஐந்தாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நாள் முறையாக திரு. ரவி குடும்பத்தார், திரு.அருணா குடும்பத்தார், திரு.சேகர் குடும்பத்தார் மற்றும் தாணுமூர்த்தி குடும்பத்தார் பூஜையாகும்.

இன்று ஜெகன் அவர்கள் வரைந்த நடராஜர் மிக அருமையாக இருந்தது. அவருடைய மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார் . ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. அருணா குடும்பத்தார், திரு. சேகர் குடும்பத்தார், திரு ரவி குடும்பத்தார்களுக்கு (22 பேர்களுக்கும்) மரியாதை செய்யப்பட்டது. மற்றும் தாணுமூர்த்திக் குடும்பத்தா(3 நபர்)ருக்கும் மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்

ஜெகன் அவர்கள் வரைந்த கோலம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்


பிரசாதமாக சக்கரைப் பொங்கல் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.

ஐந்தாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002

Tuesday, October 12, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் நான்கு

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் இரண்டைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 11.10.2010 அன்று நான்காம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நான்காம் நாள் முறையாக திரு. ரமேஷ் & சகோதரர்கள் குடும்பத்தார், முருகேசன் குடும்பத்தார் மற்றும் வடை கடை பூஜையாகும்.

இன்று ஜெகன் அவர்கள் வரைந்த சிவலிங்க தியானம் மிக அருமையாக இருந்தது. அவருடைய மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தனர். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. ரமேஷ் குடும்பத்தார் (2 பேர்), அவருடைய தம்பி திரு. ஜெகன் குடும்பத்தார் (3 பேர்), மற்றும் அவருடைய தாயார் (1 நபர்) அவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. மற்றும் முருகேசன் குடும்பத்தா(1 நபர்)ருக்கும் மரியாதை செய்யப்பட்டது.


ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்


ஜெகன் அவர்கள் வரைந்த கோலம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்


பிரசாதமாக புளியோதரை மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.

நான்காம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002

Monday, October 11, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் மூன்று

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் இரண்டைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 10.10.2010 அன்று மூன்றாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாள் முறையாக திரு. ரத்தினக்குமார் குடும்பத்தார், குழந்தைவேலு குடும்பத்தார் பூஜையாகும்.

இன்று ஜெகன் அவர்கள் வர இயலாத காரனத்தலால் அவருடைய மனைவி, மற்றும் ஜெகன் அவர்களின் தாயார் ஆகியோர் மலர் மற்றும் கலர் கோலம் போட்டு இருந்தனர். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. ரத்தினக்குமார் குடும்பத்தார் (3 பேர்), திரு. ரத்தினக்குமார் சகோதரர் குடும்பத்தார் (4 பேர்), மேலும் அவர்களின் மூத்த சகோதரர் வராததால் அவர்களிடமே அவரின் மரியாதையும் செய்யப்பட்டது. மற்றும் குழந்தைவேலு குடும்பத்தார்(4 பேர்)களுக்கு மரியாதை செய்யப்பட்டது.




ஜெகன் அவர்களின் தாயார் வரைந்த மலர் கோலம்



ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த கோலம்

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்



ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக லெமன்சாதம் மற்றும் கடலைபருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

மூன்றாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002


Sunday, October 10, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் இரண்டு

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 09.10.2010 அன்று இரண்டாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இரண்டாம் நாள் முறையாக திரு. சுப்புராம் குடும்பத்தார் பூஜையாகும்.

இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஜெகன் அவர்கள் மிக அழகாக பெருமாள் படம் வரைந்து இருந்தார். அவருடைய மனைவி, மற்றும் ஜெகன் அவர்களின் தாயார் ஆகியோர் மலர்களால் கோலம் போட்டு இருந்தனர். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. சுப்புராம் குடும்பத்தார் (1 பேர்), மற்றும் ஜெயக்குமார் குடும்பத்தார்(2 பேர்)களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் தாயார், அவருடைய மனைவி போட்டு மலர் கோலம்



ஜெகன் அவர்கள் வரைந்து இருந்த பெருமாள் படம்



ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்



ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக வெண்பொங்கல் மற்றும் கடலைபருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்று

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 08.10.2010 அன்று இனிதே நவராத்திரி விழா ஆரம்பம் ஆனது. முதல் நாள் முறையாக திரு. கோபாலகிருஷ்ணன் குடும்பத்தார் பூஜையாகும்.

கோயில் அழகாக விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஜெகன், அவருடைய மனைவி, மற்றும் ஜெகன் அவர்களின் தாயார் ஆகிய மூவரும் கலர் மற்றும் மலர் கோலங்களால் இன்னும் அழகாக அலங்கரித்து இருந்தனர். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. கோபாலகிருஷ்ணன் குடும்பத்தார் (2 பேர்), அவருடைய மைத்துனர் குடும்பத்தார் (3 பேர்) மற்றும் ஆறுமுகம் கிருஷ்ணவேணி குடும்பத்தார் (2 பேர்) மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் தாயார், அவருடைய மனைவி வரைந்த மலர் கோலம்

ஜெகன் அவர்கள் வரைந்த விநாயகர் கோலம்

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக சக்கரை பொங்கல் மற்றும் பாசிபயறு சுண்டல் வழங்கப்பட்டது.
முதல் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002