Wednesday, July 28, 2010

நானும் என் நண்பனும்

இன்று (26.07.2010) மதியம் சுமார் 3.45 மணிக்கு என் கைபேசியில் அழைப்பு வந்தது நானோ கலுரியின் சிற்றுண்டியில் இருக்க கைபேசியை எடுப்பமா வேண்டாமா என்ற ஒரே குழப்பத்தில் இருக்கும்போது மனம் எடு எந்தன் நடக்கும் என்று பார்ப்போம். ஒருவழியாக கைபேசியை எடுத்து பேசிய போது மறுமுனையில் அறிமுகமான குரல் ஆனால் யார் என்று அறிய முடியவில்லை மெதுவாக யார் நீங்கள் என்று கேட்போது மாப்ளே நான் கதிர் பேசுறன் சொல்லுடா மாமா எப்படி இருக்க, எங்க இருக்க பத்து வருடம் கலித்து இப்பதான் என் ஞாபகம் வந்தத மாமா. இல்லடா மாப்ளே நான் வெளிநாடு போய் வந்த பின் எனக்கு எல்லாம் மாறிவிடாது. இப்பொழுதுதான் மேகவிடம் உன் கைபசி எண் வாங்கி உன்னிடம் பேசுறேன் மாப்ளே கோபம் வேண்டாம் நான் இப்பொது மதுரையில் தான் உள்ளேன். இரவு 10.30 தான் பஸ் அதனால் உன்னை பார்த்து தான் நான் கிளம்புவேன் நீ எப்போவர டா. மனதில் வேலை பட்றிய கவலை இருந்தாலும் நான் கண்டிப்பாக உன்னை பார்ப்பேன் என்று உறுதி கூறிவிட்டு என்னுடைய பணிக்கு சென்றேன். (நானும் அவனும் சென்னை க்கு அருகில் உள்ள திருபோரூர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் 1998 முதல் 2000 வரை அங்கு வேலை பார்த்தோம் அதன் பின் அவன் வெளிநாடு சென்றான் நான் மதுரை வந்துவிடேன் அதன் பின் இன்று தான் அன்வனின் குரல் கேடேன்) என் வேலை எல்லாம் ஒருவழியாக மணிக்கு முன் முடிந்ததால் நான் நிமதியோடு புறப்பட்டு அவனை பார்க்க சென்றேன் பத்துவருடம் கழித்து பர்கபோறோம் எப்படி இருக்க போறனோ நமால் கண்டுபிடிக்க முடியுமா என்ற பயத்துடன் சென்றேன் மீனாக்ஷிஅம்மன் கோயில் தெற்கு கோபுரம் அருகில் நான் பத்துவருடத்துக்கு முன் நான் பார்த்த அதே நடையுடன் அவன் பார்த்த உடன் மாப்ளே என்று என்னை கட்டிபிடித்தான். அதன் பின் இருவரும் மீனாக்ஷி அம்மன் கோவில் மற்றும் மகால் என் சுற்றிப் பார்த்தோம். பின்பு இரவு உணவு உண்ணவேண்டும் என்ற போது எங்கே போகலாம் என்ற போது எனக்கு கறிதோசை வேண்டும் என்றான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இதெலாம் நான் சாப்பிடாது கிடையாது அதன் பின் என் நண்பர் கர்திகைபண்டியனுக்கு பேசி எங்கு நல்லாருக்கும் என்று கேட்பின் சிம்மக்களில் உள்ள கோனார் கடைக்கு அவனை அழைத்து சென்று இருவரும் அங்கு சாப்பிடு வெகுநேரம் பேசிகொண்டிருந்தோம். 10.30 மணி சென்னை வான்கோ என்ற பின் தான் பஸ் வந்ததே தெரியும் அதன் பின் பிரிய மனம் இல்லாமல் தான் என் வண்டியில் வீடு சென்றேன் வீடு அடையும் வரை சென்னை நினைவுகள் என் முன் வந்து கொண்டே இருந்தது மீண்டும் என்று பார்ப்போம் ....

பின் குறிப்பு: என் மனைவிடம் நான் கறிதோசை சாபிட்டத்தை சென்னவுடன் சென்ன மறுவார்த்தை என்னைக்கு எனக்கு கரிதொசையோ அன்று தான் உன்னுடைய துணிமணியை நான் துவைத்து தருவேன் !!!!!

No comments:

Post a Comment