பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானை முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு வணங்கி 6666 பாடல்கள் பாடி, அதனை 6 மண்டலங்களாக வகுத்துள்ளார். மேலும் சிவஞான தேசிகம் என்னும் தலைப்பில் 32 வியாசங்கள் ஆக்கியுள்ளார்.
இவர் சண்முக கவசம், பஞ்சாமிர்த வண்ணம், குமாரஸ்தவம், ஞான வாக்கியம், பகை கடிதல் சஷ்டி வகுப்பு, அசோக சாலவாசம் முதலிய பல்வேறு பதிகங்கள் படைத்துள்ளார்.
குமாரவேல் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் பதிகம் ஸ்ரீமத் மனிவாசப் பெருமாள் அருளிய திருச்சதகம் போலவே படிக்கும் போது கண்ணில் நீர் ஊற்றெடுக்க வைக்கும் தன்மை வாய்ந்தது.
இவர் திருசெந்தூர் முருகன் மீது பாடிய பின்வரும் பாடல் மூலம் முருப்பெருமான் மீது இவர் வைத்திருன்த அசைக்க முடியாத பேரன்பினை உணர முடிகிறது.
"பெற்றவரும் மறப்பார் பிறந்தார் மகரும் மறப்பார்
உற்றவளும் மறப்பாள் ஒரு காலமும் நீ மறவாய்
அற்றம் அறுத்து அருள்வோர் உனை அன்றி எவர் உள்றே
தெற்றோன ஆட்படுவார்க்கு அருள் சிந்து புரத்தானே!"
இதன் பொருள்: "உன்னிடம் சரணடைபவர்களுக்கு விரைவாக அருளும் திருசெந்தூர் பெருமானே! தாய், தந்தை, உடன் பிறந்தோர், பெற்ற பிள்ளைகள், வாய்த்த மனைவி ஆகியோர் என்னை மறந்து விடுவார்கள். ஆனால், ஒருபோதும் நீ என்னை மறக்க மாட்டாய். என் துன்பத்தை நீக்கி அருள் செய்பவர் உனை அல்லால் வேறு யார் இருக்கின்றார்?
No comments:
Post a Comment