Saturday, January 29, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 5

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3


திருவிளக்கு வழிபாடு
திருவிளக்கில் சுடர் ஒளியாய் திகழும் அருட்பெருஞ்ஜோதியை, மணமக்கள் வழிபட்டு அருள் வேண்டுதல்.

சோதியே! சுடரே! சூழ்ஒளி விளக்கே!
சுரிகுழல் பணைமுலை மடந்தை
பாதியே! பரனே! பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே! செல்வத் திருப்பெருன் துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே!
(திருவாசகம்)

திருமாங்கல்யத்தை வழிபடுதல்
ஒரு பெண் தாம்பாளத்தட்டில், குங்க்குமச் செப்பில் உள்ள திருநானை அப்படியே வைத்துக் கொடுக்கப் பொறுப்புள்ள ஒருவர் அதனை அவையில் உள்ள பெரியோர்களிடம் எடுத்துச் சென்று காட்ட, அவர்கள் தம் கையால் தொட்டு மனத்தால் வாழ்த்தல், பின்னர் அதனை மணமேடையில் கொண்டு வத்தல், அப்போது மணமக்கள் அதனை வழிபடல்.

அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும் அடிஇணை இவர்கள்
பணிதர அறநெறி மறையோடும் அருளிய பரண் உரை விடமொளி
மணிபொரு வரு மரகத நிலமலி புனல் அணைதரு
வயலணி
திணிபொழில் தருமணமது நுகர் அறுபதம் முரல் திருமிழலையே!
(சம்பந்தர் 1 : 20 : 5 )

ஓம்படை செய்தல்
மணமகளின் பெற்றோர்கள், தம் மகளின் வலதுகையை மணமகனின் வலதுகையிமேல் வைத்து ஒப்படைத்தல்.

உம்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப் பலம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம்! கேள்!
எம் கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க!
எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க!
கங்குல் பகல் எம் கண், மற்று ஒன்றும் காணற்க!
இங்கு இப் பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
(திருவாசகம்)

மணமக்கள் உறுதிமொழி எடுத்தல்

மணமக்கள் இருவரும் பின்வருமாறு உருதிபோலி எடுக்க வேண்டும்.

மணமகன்: _________________ ஊரில் உள்ள ___________________ (தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் மகனாகிய _______________ (மணமகன் பெயர்) நான், ____________________ (மணமகளின் தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் அருமைத் திருமகளாகிய _____________ (மணமகள் பெயர்) என்னும் பெயருடைய இவளை இறைவன் திருவருளால் என் பெற்றோரும் உற்றாருமாகிய உங்கள் நல்வழ்த்துக்களுடன், என் வாழ்க்கைத் துணை நலமாக மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்கின்றேன். நாங்கள் இருவரும் வள்ளுவர் வகுத்த வழியில் இல்லறம் ஏற்று இனிது நடத்துவோம் என உறுதியளிக்கின்றோம். அதற்கு இங்குள்ள சோதிச் சுடராம் திருவிளக்கே சாட்சியாகும்!
மணமகள்: _________________ ஊரில் உள்ள ___________________ (தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் மகளாகிய _______________ (மணமகள் பெயர்) நான், ____________________ (மணமகனின் தந்தை தாய் பெயர்கள்) இவர்களின் அருமைத் திருமகனாராகிய _____________ (மணமகன் பெயர்) என்னும் பெயருடைய இவரை இறைவன் திருவருளால் என் பெற்றோரும் உற்றாருமாகிய உங்கள் நல்வழ்த்துக்களுடன், என் கணவராக மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்கின்றேன். நாங்கள் இருவரும் வள்ளுவர் வகுத்த வழியில் இல்லறம் ஏற்று இனிது நடத்துவோம் என உறுதியளிக்கின்றோம். அதற்கு இங்குள்ள சோதிச் சுடராம் திருவிளக்கே சாட்சியாகும்!

அண்ணல் ஆலவாய் நண்ணினான்றனை
எண்ணியே தொழத் திண்ணம் இன்பமே!
(சம்பந்தர் 1 : 94 : 6 )

திருநாண் பூட்டுதல்

மங்கல இன்னிசை முழங்க, வந்திருந்தோர் மங்கல அரிசி அட்சதையை மணமக்கள்மீது போடத் திருமாங்கல்யத்தை மணமகளது கழுத்தில் மணமகன் அணிவித்தல் அப்போது மங்கலப்பெண்டிர் உடனிருந்து, திருநாண் கயிற்றில் மூன்று முடிச்சுப் போடுதல், பெண்டிர் குலவை இடுதல்; நாதசுரம் முழங்குதல்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைசலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலைக்
கண்ணின் நல் அஃது உறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பொருந்தகை இருந்ததே!
(சம்பந்தர் 3 : 24 : 1 )

நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.

2 comments:

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

1.பகுதி 44(1). இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம்

2. பகுதி 43. உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.

3. பகுதி 42. நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்

4. பகுதி 41. கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள். மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்... வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் மாட்டு மாமிசம் தான்.

5. பகுதி 40. “விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமண‌ங்களில் மாட்டை வெட்டி மதுவகையுடன் மாட்டிறைச்சி.

6. பகுதி 39. விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம்.

7. ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு. பிராமணர்களால் கேவலமான வாழ்க்கை. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்

8. பகுதி 8. திருமண சடங்குகளின் விளக்கங்கள்.

9. பகுதி 7. பிராமணர்கள் உருவாக்கிய கல்யாண சடங்குகள்.


.

Anonymous said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

Post a Comment