Sunday, January 30, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 5

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3


மாலை மாற்றுதல்
மணமக்கள் தங்கள் கழுத்தில் உள்ள தனை மாலைகளைக் கழற்றி ஒருவர்க்கொருவர் மூன்றுமுறை மாற்றிக் கொள்ளுதல்.
தலையே நீவணங்காய்!- தலைமாலை தலைக்கணிந்து
தல்யாலே பலிதேரும் தலைவனைத், தலையே நீவணங்காய்!
(அப்பர் 4 : 9 : 1 )

உறவினர் வாழ்த்துதல்
இவ்வினாடி முதல், மணமகள், இல்லத்து அரசியாக வாழ்வுக்கு அரசியாக-இல்லத்தை ஆள்பவளாக விளங்குவதைக் குறிக்க, உறவினர் ஒருவர், மணமகளது நெற்றியில் பட்டம் கட்டி வாழ்த்துதல்.

பட்ட நெற்றியர் நட்டம் ஆடுவர்
பட்டினத் துறை பல்லவ னீச்சரத்
திட்டமா இருப்பார் இவர்
தன்மையரிவார் ஆர்
(சம்பந்தர் 3 : 112 : 2 )

விருந்தினர் வாழ்த்து
திருமணத்திற்கு வந்திருக்கும் பெருமக்கள் சார்பாக வாழ்த்துதல்
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து
(திருவாசகம்)

வாழ்கவே வாழ்க என் நந்திதிருவடி
வாழ்கவே வாழ்க மலம் அருத்தான்பதம்!
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள்!
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே!
(திருமூலர் திருமந்திரம்)

வையம் நீடுக மாமலை மன்னுக!
மெய்விரும்பிய அன்பர் விளங்குக!
சைவ நன்னெறி தாந்தழைத்து ஓங்குக!
தெய்வ வெந்திரு நீறு சிறக்கவே!
(பெரியபுராணம்)

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

வாழ்க மணமக்கள்!
வாழ்க வாழ்க வாழ்கவே!

(இதனை அனைவரும் ஒருசேர முழங்க வேண்டும்!)

************
முனைவர் ச.சாம்பசிவனார் தொகுத்த "திருமுறைத்தமிழ் திருமணம்" முற்றிற்று!

தமிழன் என்ற முறையில் இந்த திருமுறைத்தமிழ் திருமணத்தை நாமும் ஆதரிப்போம்
நன்றி.

3 comments:

Unknown said...

சம்ஸ்கிருத திருமணத்திற்கு எதிராக திருமுறை திருமணம் தோன்றிய விதம் எப்படி? யார் உருவாக்கியது?? எதன் அடிப்படையில் இது நடைபெறுகிறது???

Unknown said...

இப்பாடல்களை பாடியவர்கள் கூட இப்பாடலை இப்படி பயன்படுத்த யாருக்கும் எளிமையாக சொல்லி தந்திருக்கமாட்டார்கள்...நீங்கள் மூவர் பெருமக்களையும் மிதமிஞ்சிவிட்டீர் போலும்...ஆகா என்ன தத்துவம்..பேஷ்... தொடர்புக்கு.9443022843

Unknown said...

அணில் முயற்சி என்பதை விட அணி ஆய முயற்சி என்று சொன்னால் பொருத்தமாகும் என எண்ணுகிறேன்..

Post a Comment