Thursday, January 27, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2


கோள் வழிபாடு (கும்ப வழிபாடு)

பச்சரிசியை வாழை இலைமேல் பரப்பிச் சிறிய செம்பு வைத்து அது நிறையத் தூய நீர் நிரப்பி, அதன் மேல் முழுத் தேங்காயும் உடன் மா இலைகளும் வைத்து, மலர் இட்டு, "நாளும் கோளும் (கிரகங்கள்) நல்லனவே செய்ய வேண்டும்". என்று இறைவனை நம் உள்ளத்தில் எண்ணி வேண்டுவோமாக!

வேயுறு தோழி பங்கன் விடம் உண்ட கண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு நிங்கள் கங்கை முடிமேல் அணிந்தது என்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி

சனி, பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே!

(சம்பந்தர் 2 : 85 : 1 )


மன்றில் திருவருள் பொலிதல்
இப்பொழுது இம் மன்றில் திருமண விழா இனிதே நடைபெற எம்பெருமானின் திருவருள் பொலிவதை உணர்ந்து மகிழ்வோமாக!

மாதிவர் பாகன், மறைபயின்ற வாசகன்,
மாமலர் மேய சோதி
நீதிகுண மாக நல்கும்
பொது அலர் சோலைப் பெருந்துறை எம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்பாடுத்த
அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே!
(மனிவாரசர் திருவாசகம்)

மணமகன் சடங்கு
மணமகனுக்குத் திருநீறு கொடுத்தல்

மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு,
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் இமை பங்கன், திருவாலவாயான் திருநீறே
(சம்பந்தர் 2 : 66 : 1 )

பெற்றோர் வழிபாடு
மணமகன், தன தாய் - தந்தையை வணங்கி, அவர்தம் திருவடிகளில் சந்தானம் பூசி மலரிட்டு வழிபாடு செய்தல்

தந்தையாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்தமாயின பெருமான் பரிசுடையவர் திருவடிகள்
அந்தண் பூம் புனலானைக் காவுடை யாதியை நாளும்
எந்தை என்று அடிசெர்வார் எம்மையும் ஆளுடையாரே!
(சுந்தரர் 7 )

பெற்றோர் வாழ்த்துதல்
மணமகனை பெற்றோர் வாழ்த்தித் திருநீறு அணிவித்த்டுத் திருமணப் புத்தாடைகளை வழங்குதல்

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புகவீர்காள்!
இம்மையே தரும் சோறும் கூறையும்
எத்த்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாது ஐயுறவு இல்லையே!
(சுந்தரர் 7 )
நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.

No comments:

Post a Comment