Monday, January 24, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்)


மணமேடையில் வைக்கத் தக்க பொருட்கள்

1. மஞ்சளால் ஆன பிள்ளையார்; திருமுருகன் படம்.

2. திருவிளக்கு அதாவது குத்துவிளக்கு (உயரமான விளக்கு இருப்பது நல்லது)

3. நாழி நிறைய நெல், அறுகம்புல், பச்சரிசி.

4. தேங்காய், பலம், வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு, வாழை இலைகள், மா இலைகள்.

5. மணமக்களுக்குரிய மாலைகள்; பூச்சரம்; உதிரிப் பூக்கள்; துணை மாலைகள்.

6. ஊதுபத்தி, சூடன், சாம்பிராணி(இவற்றை வைப்பதற்குரிய தட்டுகள்)

7. திருநீறு, குங்குமம், சந்தானம், பால், பழம்.

8. மணமகன் கையிலும், மணமகள் கையிலும் காப்புக் கட்டுதற்கான மஞ்சள் கயிறு (தனித்தனி); நெற்றிப் பட்டம் (மணமகளது நெற்றியில் கட்ட வெள்ளித் தகட்டினாலான சிறுபட்டம்)

9. கும்பம் (அதாவது சிறிய செம்பு)

10. மணமக்களுக்கான புத்தாடைகள்.

11. திருநாண் (தாலி)

12. குங்குமச் செப்பு (குங்குமச் செப்பில் திருநாணைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்).

13. பெரிய தம்பாளத்தட்டு.

14. மஞ்சள் கலந்த அரிசி (அட்சதை) திருநாண் பூட்டும் போது வந்திருப்போர், இந்த அட்சதையை மணமக்கள் தலையில் போட்டு வாழ்த்துதல்.

15. தேவைப்பட்டால் அரசாணிக்கால் (அதாவது ஒரு உயரமான கம்பு அதன் தலையில் மாவிலைகள் கட்டி மணமேடைக்கு இடப் புறத்தில் கட்டுவது வழக்கம். மங்கலப் பெண்டிர் மூன்று பேர் சேர்ந்து கட்டுவர்; வாழைஇலை பரப்பிப் பச்சரிசி இட்டு அதில் "ஓம்" எனும் மந்திர எழுத்து எழுதி, மலரிட்டு, மணமகனை கொண்டு வழிபாடு செய்தல்).

இவை தவிர தங்கள் சமூகச் சடங்க்குமுரைக் கேற்பச் செய்து கொள்ளலாம்.

நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை பற்றிப் பார்ப்போம்.

No comments:

Post a Comment