Tuesday, January 25, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்)
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1

1 பிள்ளையார் வழிபாடு

மஞ்சளில் பிள்ளையார் செய்து (அதாவது மஞ்சளை அம்மியில் அரைத்து ஒரு கைப்பிடி பிள்ளையார் போல் பிடித்து வைத்தல்) அறுகம்புல் இட்டு, அப்போதே மங்கள மடந்தையரை கொண்டு மிளக்கேர்ரிவைத்தல். தொடங்கும் வினைகள் இனிதே நிறைவேறப் பிள்ளையாரை முதலில் வணங்கித் தொடங்குதல் தமிழ் மரபு.


பிடியதன் உருஉமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்

கடி கணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே!

(சம்பந்தர் 1 : 123 : 5 )


2 முருகன் வழிபாடு


முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்

மருகனே! ஈசன் மகனே! - ஒருகைமுகன்

தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன்! நான்!

(11 ஆம் திருமுறை)

3 திருவிளக்கு வழிபாடு


திருவிளக்கிற்குப் பூ இட்டு வழிபாடு செய்தல்

இல்லாக விளக்கது இருள் கெடுப்பது!

சொல்லாக விளக்கது சோதி உள்ளது!

பல்லக விளக்கது பலரும் காண்பது!

நல்லக விளக்கது நமச்சி வாயவே!

(அப்பர் 4 : 11 : 8 )

4 நிறைநாழி வழிபாடு


நாழி நிறைய நெல் நிறைத்துப் பூ இட்டு வழிபடல்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும், இப் பூ மிசை

எண்ணன் பாலிக்கு மாறு, கண்டு இன்புற

இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே!

(அப்பர் 5 : 1 : 1 )

5 இறைவன்பால் நம் மனத்தைச் செலுத்துதல்


உயிருக்கு உயிராய் நிற்கும் இறைவனைச் சென்று அடையுமாறு நாம் அனைவரும் நம் மனத்தைச் செலுத்துவோமாக!


நீறு தாங்கிய திருநுத லானை

நெற்றிக் கண்ணனை நிறைவளை மடந்தை

கூறு தங்கிய கொள்கையி னானைக்

குற்றம் இல்லியைக், கற்றைஅம் சடைமேல்

ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு

அறிய சோதியை, வரிவரால் உகளும்

சேறு தாங்கிய திருத்தினை நகருள்

சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

(சுந்தரர் 7 )


நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.

No comments:

Post a Comment