Friday, October 1, 2010

சித்த மருத்துவம்

சித்த மருத்துவத்தின் தனித் தன்மையை உணர வேண்டுமென்றால் திருமுலரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். குழந்தை கருத்தரிக்கும் போது தாய் தந்தையரின் மனநிலை உடல் நிலைகளிலிருந்தே சித்த வைத்தியத்தின் நோய் நாடல் தொடங்குகிறது.

கணவனும் மனைவியும் கலவியில் ஈடுபாடும் காலத்தில் கணவனின் வலது நாசித்துளை வழியாக மூச்சு ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும். இடது நாசித்துளை வழியாக மூச்சு ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். நடுவாக மூச்சு நடைபெற்றால் அலி.. மூச்சு ஐம்புதங்களிலும் பிறந்து முழுமையாக ஓடினால் குழந்தை நூறு வயது ஆரோக்கியமாக இருக்கும். பத்துவரை ஓடினால் ஐம்பது வயது. இதே போல் வயதை கணக்கிட வேண்டும்.

ஓடுகிற மூச்சு குறுகி ஓடினால் பிறக்கும் குழந்தை குட்டையாக இருக்கும். வளைந்து ஓடினால் முடமாகும். நடுவில் தாமதித்தால் கூனாகும். இவை எல்லாம் ஆண்களுக்கு.

பெண்ணின் வயிற்றில் மலம் தங்கியிருந்தால் மந்த புத்தியுடைய குழந்தை பறக்கும். நீர் தங்கியிருந்தால் ஊமையாகப் பிறக்கும். இரண்டும் தங்கியிருந்தால் குருடாகப் பிறக்கும்.

இருவருக்கும் ஒரே மாதிரி நல்ல முறையில் சுவாசம் ஓடினால் அழகும் அறிவும் உள்ள குழந்தை பிறக்கும் என்று திருமூலர் கூறுகிறார். (திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 - பாடல்கள் 7 முதல் 13 வரை).

திருமூலரின் வழியில் வைத்தியத்தைப் பற்றி விரிவாகப் பாடியவர் போகமுனிவர். போகர் 700 ல் அவர் பாடியுள்ள மேக ராஜாங்க எண்ணெய், தாது கண்டன் கிருதம் போன்ற மருந்துகளுக்கு இணையே கிடையாது. மைசூர் ராஜ வைத்தியர்கள் இம்மருந்துகளை உபயோகித்துப்பெரும் புகழ் பெற்றிருந்தனர் (சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்) போகரை தொடர்ந்து புலிப்பாணியும் அருமையான மருந்துகளைக் கூறியுள்ளார்.

போகர் 7000 பாஷானங்களைப் பற்றிய ஆராய்ச்சி அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. போகர் நிகண்டு 1200 கருக்கிடை நிகண்டு 500 இரண்டு நூல்களும் வாத வைத்தியங்களுக்கு மூல பாடங்கள் ஆகும்.

நன்றி: சித்தர்கள் வரலாறு - எஸ். பி. இராமச்சந்திரன் - தாமரை நூலகம், சென்னை - 26

No comments:

Post a Comment