நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 09.10.2010 அன்று இரண்டாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இரண்டாம் நாள் முறையாக திரு. சுப்புராம் குடும்பத்தார் பூஜையாகும்.
இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஜெகன் அவர்கள் மிக அழகாக பெருமாள் படம் வரைந்து இருந்தார். அவருடைய மனைவி, மற்றும் ஜெகன் அவர்களின் தாயார் ஆகியோர் மலர்களால் கோலம் போட்டு இருந்தனர். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. சுப்புராம் குடும்பத்தார் (1 பேர்), மற்றும் ஜெயக்குமார் குடும்பத்தார்(2 பேர்)களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
ஸ்ரீ ராக்காயி அம்மன்
பிரசாதமாக வெண்பொங்கல் மற்றும் கடலைபருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002
No comments:
Post a Comment