Saturday, October 23, 2010

சாந்தா அபிஷேகம்

சாந்தா அபிஷேகம்

இன்று (22.10.2010) அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் சாந்தா அபிஷேகம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன், ஸ்ரீ ராக்காயி அம்மன், விநாயகர், சிவலிங்கம், குருநாதர், காத்தவராயன், மதுரைவீரன், சப்பாணி, பெரிய கருப்பு, இருளப்பர், கருப்பசாமி ஆகியோருக்கு 18 பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

எண்ணெய் காப்பு, மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, தயிர், பால், சந்தானம், சாத்துக்குடி சாறு, கரும்பு சாறு, திராட்சை சாறு, அன்னம், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், சொர்ணம் (காசு), அழகர்கோயில் தீர்த்தம், பன்னீர்.

அதன் பின்பு கோயில் முழுவதும் பூப்பந்தலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மனுக்கு வெள்ளி கவசமும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுயிருந்தது, ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு 8 . 30 மணிக்கு மேல் பூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது.


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

அதன்பின் உபயதாரர்கள் அனைவர்களுக்கும் மரியாதை நிமிர்த்தமாக துண்டு வழங்கப்பட்டது. அபிஷேகம் செய்த காசும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பிரசாதமாக சக்கரைப் பொங்கல், பருப்பு பாயாசம், கடலைப் பருப்பு சுண்டல், அபிஷேகம் செய்த அன்னம், பஞ்சாமிர்தம் மற்றும் வடை ஆகியவை வழங்கப்பட்டன.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002.

No comments:

Post a Comment