சிதம்பர ரகசியம்
பாண்டிய மன்னன் ஆணைப்படி சிதப்பரம் கோயிலை அமைத்த கருவூரார், திருமூலர் வழித் தோன்றலாகையால் மூல குருவின் பெருமை நிலைக்கும்படியாக சித்தர்கள் கூறும் உடல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே கோயிலை அமைத்துள்ளார்.
மனிதன் நாள் ஒன்றுக்கு 21600 மூச்சு விடுகிறான். கனக சபையின் மேல் 21000 தங்க ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மனித உடலில் 72000 நாடிகள் உள்ளன. தங்க ஓடுகளைப் பொறுத்த அடிக்கப்பட்டுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72000.
கனக சபையின் முன் உள்ள ஐந்து படிகள் பஞ்சபூதங்கள். தொண்ணுற்றாறு வெள்ளிப் பல கணிகள் தொண்ணுற்றாறு உடல் தத்துவங்கள்.
மனித உடலில் இருதயம் இடது பக்கம் சற்றுத் தள்ளி இருப்பதுபோல் நடராஜர் சன்னதி சற்று இடப்புறமாக ஒதுங்கியுள்ளது. இருதயம் தடித்துக் கொண்டே இருப்பது போல் நடராஜர் ஆடிக் கொண்டே இருக்கிறார்.
இருதயத்திற்குப் பக்கவாட்டில் கபாடங்கள் இருப்பதுபோல் சிதம்பதத்திலும் கருவறையில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களிலும் வழிகள் உள்ளன.
இக்கோயிலில் உள்ள ஐந்து சபைகளும் மனித உடலுடன் ஒப்பிடத் தக்க வகையில்
அன்னமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞான மய கோசம்
ஆனந்த மய கோசம்
பிராணமய கோசம்
என்று பஞ்ச கோசங்களாகவே வர்ணிக்கப்படுகின்றன.
சித்தான கருவூரார் என்ற சித்து
சின்மயத்தில் பேரின்பம் கொண்ட சித்து
முத்தான வயததுவும் முன்னுறாண்டு
மூதுலகில் பாண்டியனுக்கு உகந்த சித்து
பக்தியுடன் சிதம்பரமாம் தேவஸ்தானம்
பட்சமுடன் நிர்மித்த ஞானசித்து - போகர் 7000 / 5769
என்று போகர் கூறுவதால் கருவூராரே சிதம்பரம் கோயிலை அமைத்தவர் என்பது விளங்குகிறது.
சித்தர்கள் வரலாறு - எஸ்பி. பி. இராமச்சந்திரன்
தாமரை நூலகம், சென்னை - 26
6 comments:
நன்று.
நி.த. நடராஜ தீக்ஷிதர்
www.natarajadeekshidhar.blogspot.com
post Content is not related with the title
remove word verification process
சிதம்பரம் கோயில் தத்துவம் அறிந்துகொண்டோம். நன்றி.
சிதம்பரம் கோயிலைப் பற்றிய தத்துவமே சிதம்பர ரகசியம் ஆகும். நன்றி ராம்ஜி_யாஹூ
நன்றி மாதேவி அவர்களே
நன்றி நி.த. நடராஜ தீக்ஷிதர் அவர்களே
Post a Comment